Friday, July 24, 2009

வளரும் மனம்

நீண்ட காலத்திற்குப் பிறகு, மனித வரலாற்றில் ஒரு முக்கியமான காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். அறிவியல், தொழில் துறை ,புத்தகங்கள் போன்றவை கடந்த இருநூறு ஆண்டுகளில் மிகவும் வளர்ந்துள்ளன. ஆனால் நாம் அவற்றை தேவையான அளவு பயன்படுத்துகிறோமா?

முன் இருந்த காலகட்டத்தை விட இப்போது நாம் பல துறைகளைப் பற்றியும் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. தொலைக்காட்சி, புத்தகங்கள், இன்டர்நெட், வானொலி போன்றவை பல தகவல்களையும் தெரிந்து கொள்ள உதவுகின்றன. ஆனால் நமது மனம் அவற்றை நாடினால் மட்டுமே அவற்றின் பயன் நமக்கு கிடைக்கும்.

நாம் நமது வேலை சார்ந்த துறைகளைப் பற்றி தெரிந்து கொள்கிறோம். அது கட்டாயத்தினால் ஏற்படுவது. நமது ஆர்வம் காரணமாக சிலவற்றை படிக்கிறோம்.

ஆனால் நமக்கு கிடைத்துள்ள அருமையான வாய்ப்புகளை சரியாக பயன்படுத்த நமது முயற்சியும் தேவை. நமக்கு கிடைக்கும் எல்லாச் செய்திகளையும் தெரிந்து கொள்வது முடியாத காரியம். அது தேவையும் இல்லை. ஆனால் பரவலான முறையில் பல செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம். அறிவியல், உடல் நலம், தத்துவம், மனதை முன்னேற்றும் வழிகள் என பல துறைகளைப் பற்றி அறிவைச் சேர்க்கலாம். இவை நமது வாழ்கையில் உதவியாகவும், நமது மனதைப் பரந்ததாக மாற்றவும் பயன்படும். அறிவு என்னும் பூச்செடிகளை வளர்த்து நமது மனம் என்னும் தோட்டத்தை வளப்படுத்தலாம்.

"எனக்குக் கதைப் புத்தகந்தான் உயிர்!"
"எனக்கு அறிவியல்தான் இன்ரஸ்ட்!" - என்று சொல்வதைக் கேட்டிருக்கலாம். இவற்றோடு மற்றதற்கும் சற்று நேரம் ஒதுக்கலாம்.

பணம் சேர்க்க கடுமையாக முயற்சி செய்வதைப் போலவே நமது மனதுக்கும் மணம் சேர்க்கும் முயற்சியிலும் நாம் சற்று இறங்கலாம்.

2 comments:

அன்புடன் அருணா said...

//பணம் சேர்க்க கடுமையாக முயற்சி செய்வதைப் போலவே நமது மனதுக்கும் மணம் சேர்க்கும் முயற்சியிலும் நாம் சற்று இறங்கலாம்.//
நல்ல கருத்து!!பூங்கொத்து!

Ezhilan said...

அன்புடன் அருணா அவர்களுக்கு,
நன்றி.