Friday, July 24, 2009

எப்படி இருக்க வேண்டும் எனது மனைவி?













மானின் விழியே கொண்டவள் அவளும்,
தேனின் சுவையே கொண்டதே அவள்மொழி,
அவளது கன்னமும் அழகான ஆப்பிளே,
என்றே நானும் சொல்லிட மாட்டேன்.

நானும் சொல்வேன் என்துணை குணமும்,
நலமே சொல்வேன் என்னெதிர் பார்ப்பை,
அவளுடல் அழகில் சிலகுறை இருப்பினும்,
அவள்மன அழகில் உயர்வே வேண்டும்.

அவள்பார்வையும் கொண்டதே அன்பின் மொழி,
சொல்தனும் தந்திடும் அமைதியும் எனக்கே,
அவள் மனதின் அழகே பேரழகே,
அதனையும் கண்டு மகிழ்ந்திருப்பேனே.

உலகஅறிவும் பெற்றிடவேண்டும்,அதன்
உயர்வும் நாமும் அறிந்திட வேண்டும்,
சிந்தனை உயர்வே நமக்கு வேண்டும்,
என்றே அவளும் இருந்திடுவாளே.

அடிமையாய் அவளும் இருக்கவும் வேண்டாம்,
அரும் நண்பனாய் அவளும் இருக்கவும் வேண்டும்,
எனது மனதினைப் புரிந்திட வேண்டும்,
எனது உணர்வினை மதித்திட வேண்டும்.

என்னுடன் விவாதப் போரும் இடாமல்,
ஏற்றமும் தந்திடும் உரையும் வேண்டும்,
நறுமணம் கமழ்ந்திடும் சோலையும் அவளே,
அதன் மனம் பரவிடும் என்மனம் தனிலே,

துயரம் வரும்தனில் இருப்பாள் இரும்பாய் ,
அவள் மன வலிவும் என்வலி போக்கிடும்,
இவள்தான் எனது கனவுக் கன்னி,
இவள்தன் இப்படி இல்லை எனினும்,
அன்பின் துணையுடன் அறிவின் துணையுடன் ,
அவளையும் நானும் மாற்றிட முயல்வேன்!

2 comments:

முனைவர் கல்பனாசேக்கிழார் said...

வண்ணமோ வடிவமோ அழகல்ல யார் ஒருவர் எவர் ஒருவரை மனநிறைவு அடையச் செய்கிறார்களோ அதுவே அழகு.உங்கள் நல்ல எண்ணங்களுக்கு வாழ்த்துக்ள்.

Ezhilan said...

முனைவர் சே.கல்பனா அவர்களுக்கு,
நன்றி.